Primary tabs
-
3.3 இசை நிறை
இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து (முழுமையாக்கி) நிற்பது, இசைநிறைக்கும் இடைச்சொற்களாக ஏ, ஒடு, தெய்ய ஆகியன குறிக்கப்படுகின்றன.
ஏகார இடைச்சொல் ஆறு பொருளில் வரும் என்பதை முன்னரே கண்டோம். அவற்றில் ஒன்று இசைநிறை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
எடுத்துக்காட்டு
எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே (நன் - 58)
• ஒடு - இசைநிறைத்தல்ஒடு என்னும் இடைச்சொல் வேறு பொருள் தராது இசை நிறைக்க வந்துள்ளது.
எடுத்துக்காட்டு
விதைக்குறு வட்டில் போதொடு பொதுள
விதை உடைய தட்டில் மலர் நிறைந்துள்ளது என்பது இதன் பொருள். இங்கு ஒடு என்பது வேறு பொருள் தராது இசைநிறைத்தது.