தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.4 தொகுப்புரை

    நண்பர்களே! இது வரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துப் பார்ப்போமா?

    கலம்பகம் என்ற இந்த இலக்கிய வகையின் பெயர் வந்த முறையை அறியமுடிகிறது.

    கலம்பக இலக்கிய வகையின் தோற்றம் தெரிய வருகிறது.

    நந்திக்கலம்பகம் என்ற நூல் தொடர்பாக வழங்கப்பட்டு வரும் மரபு வழியான செய்தியை அறிய முடிகிறது.

    பல வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன.

    நந்திவர்மனின் கொடை, வீரம், ஆற்றல், புகழ் போன்ற பல சிறப்புகள் தெரிய வருகின்றன.

    நந்திக்கலம்பகம் என்ற நூலின் இலக்கியச் சிறப்பு, உவமைச் சிறப்பு, சொல் ஆட்சித் திறன் என்பனவற்றை அறிந்து மகிழ முடிகிறது.

    1.
    நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு எப்பெயரால் அழைக்கப்படுகிறது?
    2.
    ஊசல் என்ற உறுப்பில் நந்திவர்மன் போர் செய்த இடமாகக் குறிப்பிடப்படுவது எது?
    3.
    மறம் என்ற கலம்பக உறுப்பின் பொருள் யாது?
    4.
    மதங்கியார் என்போர் யாவர்?
    5.

    தூது என்ற கலம்பக உறுப்பில் நந்திவர்மனின் பெருமை எவ்வாறு புகழப்படுகிறது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 10:19:58(இந்திய நேரம்)