தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6. கோவை இலக்கியம்

    • பாடம் - 6

      C01236 கோவை இலக்கியம்

      இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

      சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய கோவை இலக்கியத்தைப் பற்றி இப்பாடம் விளக்குகிறது. கோவை இலக்கியத்தின் தோற்றம் பற்றியும் கோவை நூல்கள் பற்றிய பொதுவான செய்திகளையும் விளக்குகிறது. மாணிக்கவாசகரின் திருக்கோவையார் இப்பாடத்தில் விளக்கமாகப் பேசப்படுகிறது.

      கோவையின் பாடுபொருள் பற்றியும் தலைவன், தலைவி ஆகியோரின் நிலை குறித்தும் விளக்கிச் செல்கிறது. இதில் கோவை இலக்கியத்தின் அகத்துறைகள் பலவும் விளக்கம் பெறுகின்றன. பாட்டுடைத் தலைவனாகிய சிவபெருமானின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது இப்பாடம்.


      இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


      • கோவை இலக்கியத்தின் பெயர்க் காரணத்தைச் சுட்டிக் காட்டலாம்.

      • கோவை இலக்கிய வகைகளின் தோற்றத்தை இனங்காணலாம்.

      • திருக்கோவையார் என்ற நூலில் இடம் பெறும் கோவை இலக்கியத் துறைகள் சிலவற்றைப் பட்டியலிடலாம்.

      • சிவபெருமானின் பெருமைகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

      • பண்டைத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டலாம்.

      • கோவை இலக்கிய வகையின் இலக்கியச் சிறப்புகளை வரிசைப்படுத்தலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:29:46(இந்திய நேரம்)