தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.3 தொகுப்புரை

    இதுகாறும் இக்காலத் தமிழில் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும், எந்தெந்த இடங்களில் மிகாது இயல்பாகும் என்பதையும் தக்க சான்றுகளுடன் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம். வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள் பற்றி இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ள விதிகளை நன்கு பின்பற்றினால் நாம் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும், பேசவும் முடியும். நாம் நாள்தோறும் படிக்கின்ற தமிழ் நாளிதழ்கள், அவ்வப்பொழுது படிக்கின்ற தமிழ் நூல்கள், நமக்குப் பாடமாக அமைந்த பாடநூல்கள், இணையவழிப் பாடங்கள் ஆகியவற்றை உற்று நோக்கி எங்கெங்கு வல்லினம் மிகுகிறது, மிகாது இயல்பாகிறது என்பதை எல்லாம் ஆழ்ந்த கவனத்துடன் படித்து வருவோமேயானால் தமிழை நல்ல தமிழாக, பிழையில்லாத தமிழாக எழுத நம்மால் முடியும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    எண்ணுப்பெயர்களில் எவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது?
    2.
    இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகுமா?
    3.
    மூன்றாம் வேற்றுமைக்கும், ஆறாம் வேற்றுமைக்கும் உரிய சொல்லுருபுகள் யாவை?
    4.
    வினைத்தொகையில் வல்லினம் மிகுமா? ஒரு சான்று தருக.
    5.
    இரவுப் பகல், இரவு பகல் – இவற்றில் பிழையில்லாத் தொடர் எது?
    6.
    எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகுமா? ஒரு சான்று தருக.
    7.
    தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாமைக்கு ஒரு சான்று தருக.
    8.
    குறிப்புப் பெயரெச்சத்தை இக்கால மொழியியலார் எவ்வாறு குறிப்பிடுவர்?
    9.
    ண்டு, ந்து என முடியும் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்வரும் வல்லினம் மிகாமைக்குச் சான்று தருக.
    10.
    ஆதிபகவன், ஆதிப்பகவன் – இவற்றில் பிழையில்லாத் தொடர் எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-10-2017 10:29:20(இந்திய நேரம்)