தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- இக்காலத் தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

  • பாடம் - 6

    C02146 இக்காலத் தமிழில் வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இக்காலத் தமிழில் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும், எந்தெந்த இடங்களில் மிகாமல் இயல்பாக அமையும் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டி, அவற்றைத் தக்க சான்றுகளுடன் விளக்கிச் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிர்கள் முன்னும், ய, ர, ழ என்னும் மெய்களின் முன்னும் வருமொழி முதலில் வரும்போதே, வல்லினம் மிகும் அல்லது மிகாது என்பதை அறிந்துகொள்ளலாம்.
    • அ, இ, எ என்னும் எழுத்துகளின் அடியாகத் தோன்றிய சொற்களின் முன் வரும் வல்லினம் மிகுதலையும், மிகாமல் இயல்பாதலையும் அறிந்துகொள்ளலாம்.
    • வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
    • வேற்றுமைப் புணர்ச்சியிலும், அல்வழிப் புணர்ச்சியிலும் வல்லினம் எங்கெங்கு மிகும், எங்கெங்கு மிகாது என்பனவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
    • எண்ணுப்பெயர்கள், எண்ணுப்பெயரடைகள் முன் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின்முன் கள் விகுதி வரும்போது, வல்லினம் மிகுமாறு எழுதுவது இக்காலத் தமிழில் பெரும்பாலும் இல்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:13:14(இந்திய நேரம்)