Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
2. விருந்தோம்பல் தமிழர் வாழ்வில் பெற்ற இடத்தைக் காட்டுக.இளையான் குடி மாறனார் என்பவர் தம் வீட்டுக்கு வந்த விருந்தினர்க்குச் சமைத்துப் போட அரிசியில்லாத நிலையில், அன்றைக்கு விதைத்து வந்த நெல்லைப் போய் அரித்துக் கொண்டு வந்தார்; வயலில் முளைத்த கீரையைப் பறித்து வந்து சமைக்கச் செய்தார். விருந்தினரைப் போற்றி உண்பித்தார். தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் இத்தகு இடத்தைப் பெற்றிருந்தது.
