தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1. நாயக்கர் காலப் பண்பாடு

  • பாடம் - 1

    C03131  நாயக்கர் காலப் பண்பாடு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?

    Audio Button

    மதுரை நாயக்கர்களாலும் தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகம் ஆளப்பட்ட காலத்தில், பல வளர்ச்சிகளும் மாற்றங்களும் நிகழ்ந்த நிலையை இப்பாடம் எடுத்துரைக்கின்றது. மதுரை மீனாட்சி கோயிலைப் பற்றிய பல அரிய செய்திகளை இப்பாடம் வழங்குகின்றது. திருவரங்கம் திருக்கோயில் பற்றியும் இப்பாடம் பல செய்திகளை எடுத்துரைக்கின்றது. நாயக்கர் காலப் பழக்க வழக்கங்களை இந்தப் பாடம் தொகுத்துத் தருகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?  

    • இசுலாமியர் ஆதிக்கத்தை ஒடுக்கிய நாயக்கர் தமிழ் நாட்டை ஆட்சி செய்த வரலாற்றை அறியலாம்.

    • நாயக்கர் பரம்பரையைப் பற்றியும், அதில் சிறப்பு மிக்க அரசர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    • திருமலை நாயக்கர் கலைகளைப் போற்றி வளர்த்தமையை அறியலாம்; அவர் மதுரைத் திருவிழாக்களை இணைத்து அமைத்ததைக் கண்டு வியக்கலாம்.

    • இராணி மங்கம்மாளின் ஆட்சிச் சிறப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

    • நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட கலை வளர்ச்சியை அறிந்து மகிழலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:00:15(இந்திய நேரம்)