Primary tabs
பாடம் - 2
புறநானூற்றைக் குறித்த இரண்டாவது பாடம் இது. இப்பாடம் 95, 107, 112, 163, 164, 182, 183 என்னும் எண்ணுடைய ஏழு பாடல்களைக் குறித்த விளக்கங்களைச் சொல்லுகிறது.
இப்பாடல்கள் ஒளவையார், கபிலர், பாரி மகளிர், பெருஞ்சித்திரனார் பெருந்தலைச் சாத்தனார், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆகியோரால் பாடப் பெற்றவை எனத் தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு பாட்டும் அக்கால வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளை உட்கொண்டது என்பதைக் கூறுகின்றது.
பண்டைக் காலக் குறுநில
மன்னர்கள்
பெருவள்ளல்களாக விளங்கியதை அறியலாம்.
வள்ளல்களால்
பேணப்பட்ட புலமைச் சமூகம் பற்றி
அறியலாம்.
கொடைமடம்
என்பது யாதெனப் புரிந்து கொள்ளலாம்.
புகழ்வது
போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல்
போன்ற உத்திகளைப் புலவர் பயன்படுத்தியுள்ள
பாங்கினை உணரலாம்.
உலகம்
நிலைபெற்று இருப்பதற்குக் காரணமாகிய
சான்றோர் பண்புகள் எவையெனத் தெளிவு பெறலாம்.