Primary tabs
பாடம் – 3
D02113 அகத்திணை இயல் - II
இந்தப் பாடப் பகுப்பு களவு, கற்பு பற்றிய வரையறைகளையும் களவு, கற்பு என்னும் இருவகை நிலையிலும் நிகழும் செய்திகளையும் கூறுகிறது.
அறத்தொடு நிற்றல் எனும் செயல்பாடு, தலைவியின் ஊடல், அதைப் போக்கும் வாயில்களாக வருவோர், அவர் நிகழ்த்தும் உரைகள் மற்றும் துறவறம் பற்றிய செய்திகளைச் சொல்கிறது.
-
களவு, கற்பு பற்றிய விளக்கத்தை அறியலாம்.
-
களவிலும் கற்பிலும் நிகழும் புணர்ச்சியும் பிரிவும் பற்றிய செய்திகளைக் கற்றுணரலாம்.
-
அறத்தொடு நிற்கும் உயர் பண்பினை அறியலாம்.
-
ஊடல் நீக்கும் வாயில்களின் ஒருமித்த நோக்கையும், போக்கையும் அறிந்து தெளியலாம். எது துறவு என்று தெளிவு பெறலாம்.