Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-I2.குறையுற உணர்தல் - விளக்குக.
தலைவன் வந்து, தன் குறையைத் தோழியிடம் உரைக்க அதன் மூலம் தலைவன் தலைவியது களவு ஒழுக்கத்தைத் தோழி உணர்வது குறையுற உணர்தல் எனப்படும். தலைவன் தோழியிடம் சென்று நின்று, ஊர்- பெயர் வினவுவதும், கெட்ட (தொலைத்த) பொருள் ஒன்றைப் பற்றிக் கேட்பதும் அதன்வழித் தோழி தேர்ந்து தெளிவதும் இவ்வகைப்படும்.