Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I4.
தலைவி மகிழ்ச்சி - விளக்கம் தருக.
இது கிழத்தி மகிழ்ச்சி என்று நம்பி அகப்பொருளில் உரைக்கப்பட்டுள்ளது. தலைவி தனது வருத்தம் நீங்கி மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றித் தோழியிடம் கூறுவது கிழத்தி மகிழ்ச்சியாகும். இதனைப் பெருமகள் உரைத்தல் என்னும் கிளவியாக நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுள்ளார். “தோழியே! தலைவன் எனக்குக் கொடுத்த அசோக மரத்தின் தழைகளால் ஆகிய கையுறைப் பொருளையே தெப்பமாகக் கொண்டு நான் துன்பமாகிய வெள்ளத்தை நீந்திக் கரையேறினேன்” என்று தஞ்சைவாணன் கோவைத் தலைவி கூறுவது குறிப்பிடத்தக்கது.