Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II3.
வன்புறை - வன்பொறை விளக்கம் தருக.
இவ்விரண்டும் ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய பொதுவான கிளவித் தொகைகளில் இடம் பெற்றவை. வன்புறை என்பது பிரிவுக்கு வருந்தும் தலைவியைப் பார்த்து தோழி பொறுத்துக்கொண்டு இருப்பாயாக என்று வற்புறுத்திக் கூறி ஆறுதல் மொழிகளைப் பேசுதல் ஆகும். வன்பொறை என்பது தோழியின் ஆறுதல் மொழிகளைக் கேட்ட தலைவி தலைவனின் பிரிவை வலிந்து பொறுத்துக் கொள்ளுதல் ஆகும்.