தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

  • பாடம் - 3

    E

    D02123 கற்பியல்
    (நம்பி அகப்பொருள் - வரைவியல், கற்பியல், ஒழிபியல்)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் கற்பியல் தொடர்பான அகப்பொருள் விளக்கங்களை வழங்குகிறது.

    கற்பு பற்றிய இலக்கண வரையறையைத் தருகிறது. கற்பிற்குரிய ஏழு வகையான கிளவிகளைத் தொகுத்தும் வகுத்தும் விளக்குகிறது.

    கற்பிற்குரிய கிளவிகளில் ஒன்றாகிய இல்வாழ்க்கை என்பதன் வகைகளையும் விரிவுகளையும் தருகிறது. கற்பிற்குரிய கிளவித் தொகைகளில் இரண்டாவதாக அமையும் பரத்தையிற் பிரிவு பற்றி விளக்குகிறது.

    பரத்தையிற் பிரிவு தவிர எஞ்சியுள்ள ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய பொதுவான கிளவிகளைக் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத் தொகுப்பைக் கற்று உணர்வதால் கீழ்க்காணும் பயன்களைப் பெறலாம்.

    கற்பின் இலக்கணத்தை அறியலாம்.

    இல்வாழ்க்கையில் பலரது மகிழ்ச்சி ஒருங்கிணைவதை உணரலாம்.

    இல்வாழ்க்கையில் அமைந்த மகிழ்ச்சியின் முடிவாக ஊடல் தோன்றுவதும், அதற்குக் காரணமாகத் தலைவன் பரத்தையிற் பிரிவதும் ஆகிய இலக்கண வழக்காறுகளைக் கற்றுணரலாம்.

    பரத்தையிற் பிரிந்த தலைவன் சார்பாகப் பலர் வந்து தலைவியின் ஊடலைப் போக்கி, மீண்டும் இருவரையும் ஒன்று சேர்க்கும் வாழ்வியல் அமைப்பைக் கண்டுணரலாம்.

    இல்லற வாழ்க்கை மேற்கொள்ளும் தலைவன் ஓதல், காவல், தூது, துணை, பொருள் என்னும் ஐவகைப்பட்ட காரணங்களுக்காக அவ்வப்போது தலைவியைப் பிரிந்து செல்வது இயற்கை என்பதை அறியலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:58:30(இந்திய நேரம்)