Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.இடம், காலம் - விளக்குக.
இடம்: அகப்பாட்டு உறுப்புகளில் ஐந்தாவதாக அமைவது இடம் என்னும் உறுப்பாகும். அகப்பாடல்களில் உணர்த்தப்படும் காதல் செயல்பாடுகள் நிகழும் நிலம், ‘இடம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தலைமக்கள் சந்திக்கும் இடம், பேசும் இடம், குறி இடம், புணர்ச்சிக்குரிய இடம் என்பனவாகப் பல நிலைகளில் விரிவுபடுத்திப் பொருள் உணர்ந்து கொள்ளலாம்.
காலம் : இது அகப்பாட்டு உறுப்புகளில் ஆறாவதாக வருவது. பொதுவாக, காலம் என்பது மூவகைப்படும். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன அவை, இம்மூன்றே அகப்பாடல்களில் உணர்த்தப்படும் செய்திகளுக்கும் உரிய காலங்களாக அமைகின்றன.