Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.அகப்பாட்டு உறுப்புகளில் ஒன்றான பயன் என்னும் வகையை உதாரணத்துடன் விளக்குக.
இது அகப்பாட்டு உறுப்புகளில் ஏழாவதாக வருவது. ஒவ்வொரு பாடலுக்கும் அதனால் விளையும் பயன் ஒன்று உண்டு. அவ்வாறே அகப்பொருள் பாடல்களில் அமையும் பயன்பாட்டை விளக்குவதாக இவ்வுறுப்பு அமைகிறது. அகப்பாடல்களில் ஒருவர் கூற்று நிகழ்த்த, அதன் பயனாய் அவர் அடைவது யாது என விளக்குவதே இப்பிரிவாகும். "கூறாய் தோழி யான் வாழுமாறே" என்று தலைவி தோழியைப் பார்த்துக் கேட்கும்போது, தனது நல்வாழ்வாகிய இல்வாழ்விற்கு வழிவகை காணுமாறு தோழியை வேண்டுவதும், அதுகேட்ட தோழி, தலைவனை வலியுறுத்திக் கற்பு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதும் பின்னர் நிகழும்; இதுவே இப்பாடலின் பயனாகும்.