Primary tabs
-
5.3 கைக்கிளையும் பெருந்திணையும்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகைத் திணைகளையும் அன்பின் ஐந்திணை என்பர்.
அவற்றிற்கு மாறாக அமையும் எஞ்சிய திணைகள் இரண்டு. அவையாவன:
1) கைக்கிளை
2) பெருந்திணை
இவற்றையே,
1) அகப்பொருட் கைக்கிளை
2) அகப்புறக் கைக்கிளை
3) அகப்பொருட் பெருந்திணை
4) அகப்புறப் பெருந்திணை
என்று மேலும் விரிவு படுத்திக் கூறுவர்.
இவற்றுள் அகப்பொருட் கைக்கிளை என்பது ஏற்கெனவே முன்னைய பாடங்களில் (D02111, D02113) அகத்திணை இயலில், விளக்கப்பட்டது. எனவே, எஞ்சிய மூன்றும் இவ்வியலில் விளக்கப்படுகின்றன.