Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.
உள்ளுறைக்கும், இறைச்சிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுக.
உள்ளுறை உவமம், இறைச்சி இரண்டும் சில ஒற்றுமைக் கூறுகளையும் வேறு சில நுட்பமான வேறுபாடுகளையும் உடையவை.
ஒற்றுமை:
1) இரண்டும் குறிப்பால் அறியப்படுவன.
2) இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன.
3) இரண்டும் அகப்பாடலுக்கே உரியன.வேற்றுமை:
1)
உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான சொல்லும், பொருளும் அதனால் பெறப்படும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் பொருந்தி வரும். கருப்பொருள் உவமை போலவும், அதன் வழி நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் உட்கருத்து உவமேயம் போலவும் அமையும்.
2)இறைச்சியில் கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் எதிர்மறையாகவும் முடியலாம். சொற்பொருள் - அதற்கு இணையான குறிப்புப் பொருள் என்னும் இரண்டுக்கும் மேலாக வேறு ஒரு கருத்தும் வெளிப்படுவது இறைச்சியின் தனிப்பண்பாகும். புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக்கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம், புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி.