Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
விடைதழாஅல், குற்றிசை, சுரநடை, தபுதாரநிலை இவற்றை விளக்குக.
விடைதழாஅல்
தலைவன் தான் விரும்பிய தலைவியை மணத்தல் பொருட்டு, ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல், இதனை ஏறு தழுவுதல் என்று கூறுவர்.
குற்றிசை
தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.
சுரநடை
தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.
தபுதார நிலை
தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.