Primary tabs
-
6.4 தொகுப்புரை
இப்பாடத் தொகுப்பின் மூலமாகக் கற்றுணர்ந்த செய்திகளாவன :
1.
அகப்பொருள் தொடர்பான இலக்கண அமைப்புகளை உணர்ந்தோம்.
2.
அகப்பொருள் இலக்கணத்தில் சிற்சில அமைப்புச் சிறப்புகளை அறிந்தோம்.
3.
பாலது ஆணை அல்லது தலைவியின் முயற்சி இயற்கைப் புணர்ச்சிக்குக் காரணமாதலைக் கற்றறிந்தோம்.
4.
இரு வகைக் கைக்கிளைக்கு இடையே அமைந்த நுட்ப வேறுபாட்டை உணர்ந்தோம்.
5.
அகப்பொருள் வாழ்வியலில் தோழியின் முதன்மைச் சிறப்பை உணர்ந்து தெளிந்தோம்.
6.
அகப்பொருள் மரபுகள் பலவற்றைக் கற்றுணர்ந்தோம்.
7.
அகப்பொருள் இலக்கண அறிவுபெறும் சூழலில் பயன்படும் அருஞ்சொற்கள், வரையறைகள், வகைப்பாடுகள் போன்றவற்றை ஒருங்கு தொகுத்து உணர்ந்தோம்.