Primary tabs
-
பாடம் - 5
D03125 ஒழிபியல் - 1இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
யாப்பருங்கலக் காரிகை ஒழிபியலின் முதல் ஐந்து நூற்பாக்களில் சொல்லப்பட்டுள்ள இலக்கணத்தை விளக்குவது இப்பாடம். ஒழிபு - ஒழிபியல் என்றால் என்ன என்பதைப் புலப்படுத்திய பின், உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லப்படாமல் விடுபட்ட சில செய்திகளையும், சொல்லப்பட்டவற்றுக்கான சில புறனடைகளையும், புதிய சில செய்திகளையும் உரிய எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
தமிழ் யாப்பிலக்கணத்தை முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.
-
இலக்கணப் புலவர், இலக்கியப் புலவரை அடியொற்றுபவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
-
அதாவது, இலக்கணக்காரர்களுடைய விதிமுறைகளை இலக்கியப் புலவர் மீறும்போது இலக்கணக்காரர்கள் ஒப்பி , புறனடை விதிகளை உருவாக்கி வந்திருக்கும் தமிழ் இலக்கண மரபின் நெகிழ்ச்சிப் போக்கைப் புரிந்து கொள்ளலாம்.
-