தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

செய்யுள்நெறி

  • 4.1 செய்யுள்நெறி

    நெறி என்பது சொல்லமைப்பு வகையினைக் குறிக்கும். செய்யுளில் அமையும் சொல்லமைப்பு வகைகளை எடுத்துரைப்பது செய்யுள்நெறி ஆகும்.

    செய்யுள்நெறி கீழ்க்காணும் கூறுகளைக் கொண்டுள்ளது.

    1)
    உயிரெழுத்து (குறில், நெடில்) அமையும் நிலை.
    2)
    மெய்யெழுத்தின் வகைகள் (வல்லினம், மெல்லினம், இடையினம்) தனித்து வருதலும் கலந்து வருதலும்.
    3)
    பொருள்தெளிவுக்கு உரிய சொற்கள் இடம் பெறுதலும் வருவித்தலும்.
    4)
    வெளிப்படைப் பொருள் அமைதலும் குறிப்புப் பொருள் அமைதலும்.
    5)
    ஓசை நலம் குன்றாமை.
    6)
    சொல்நலம், பொருள்நலம் அமைதல்.
    7)
    கருத்து, வருணனைகளின் நம்பகத்தன்மை.
    8)
    வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் நிலை.
    9)
    ஒன்றன் இயல்பை வேறொன்றில் ஏற்றி உரைத்தல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:41:02(இந்திய நேரம்)