தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செய்யுள்நெறி - கௌடம்

  • பாடம் - 6
    D03136 செய்யுள்நெறி - கௌடம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    செய்யுள்நெறி எவ்வெவற்றின் அடிப்படையில் அமைகிறது என எடுத்துரைக்கின்றது. கௌடநெறியின் இயல்பினைச் சுட்டிக் காட்டுகின்றது. கௌடநெறியின் பத்துவகைக் குணப்பாங்குகளை விவரிக்கின்றது. கௌடநெறி, வைதருப்பநெறியிலிருந்து வேறுபடும் பாங்கினை விளக்குகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    கௌடநெறியின் தனித்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
    கௌடநெறியின் குணப்பாங்குகளைச் சான்றுடன் புரிந்து கொள்ளலாம்.

    சொல்லின்பமும் பொருளின்பமும் அமையச் செய்யுள் அமைக்கத் தெரிந்து கொள்ளலாம்.

    மோனைத் தொடை நயமும் தொகைச் சொல் மிகத் தொடுத்தலும், இன்பம் பயக்கும் நிலையைப் படித்து உணரலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 12:14:30(இந்திய நேரம்)