Primary tabs
6.0 பாட முன்னுரை
செய்யுளில் இடம்பெறும் ஒற்றுகள், சொல்நிலை, பொருள்நிலை, ஓசைநயம் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யுளை இனம்பிரித்து அறிதல் செய்யுள்நெறி எனப்படும்.
தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியலில் இருபது வண்ணங்களையும் தமிழின் இயல்பிற்கேற்ப எடுத்துரைத்துள்ளார். இதுபோன்று வடஇந்தியாவில் வழங்கப் பெறும் சமஸ்கிருதம் முதலான மொழிகளில் செய்யுள்நெறி எனச் சில, மொழிக்கு ஏற்பக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் விதர்ப்ப நாட்டினரும், கௌட நாட்டினரும் கடைப்பிடித்து வரும் வைதருப்பம், கௌடம் ஆகிய இருநெறிகள் சிறப்புடையன. தண்டியாசிரியர் அவ்விரு நெறிகளையும் தண்டியலங்காரத்தில் எடுத்துரைத்துள்ளார்.
வைதருப்பநெறி குறித்துக் கடந்த இருபாடங்களிலும் (பாடம் 4,5) அறிந்து கொண்டோம். இப்பாடத்தில் கௌடநெறி குறித்துக் காண்போம்.