Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
7.
ஏக தேச உருவக அணி என்றால் என்ன? ஒரு சான்று தந்து விளக்குக.
ஒரு பாடலில் உருவகம் செய்யும் இருபொருள்களில் ஒரு பொருளை உருவகம் செய்து விட்டு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏக தேச உருவகம் ஆகும்.
எடுத்துக்காட்டு''பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.''(குறள். 10)இக்குறளில், பிறவியைக் கடலாக உருவகம் செய்து விட்டு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாகிய இறைவன் திருவடியைத் தெப்பமாக உருவகம் செய்யாது விட்டமையால் இது ஏக தேச உருவகம் ஆயிற்று.