தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.0 பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    தமிழ் நாடகம் மிகவும் தொன்மை வாய்ந்தது ஆகும். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வடிவங்கள் தமிழின் பன்முகச் சிறப்பினைப் பிரதிபலிப்பனவாகும். இவற்றில்     நாடகம் எனப்படுவது காட்சித் தமிழ் எனக் கருதப்படுகிறது. மனிதன் இவ்வுலகில் தோற்றம் கண்ட போதே அவனோடு உள்ளமைந்த கலைக் கூறுகளைக் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும். மேலும், வாழ்வின் கூறுகள் நாடகக் கலையில், ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்த வல்லன. எனினும் அதுபோன்றே நாடகமும் மனித மனத்துக்குள் ஊடுருவிச் செல்லும் உயரிய கலையாகும். அந்நாடகம் குறித்த வரலாற்றுச் சான்றுகள் சங்ககாலம் முதற்கொண்டே நமக்குக் கிடைக்கின்றன. தொன்மைக்காலம் தொடங்கி, சங்கம் மருவிய காலம் வரையிலும் உள்ள நாடகம் குறித்த செய்திகளை இப்பாடத்தின் வழி அறியவிருக்கிறோம்.

    தமிழ் நாடகத்தின் பன்முக வளர்ச்சியின் தொடர்ச்சியாக அவை அமைந்துள்ளன. பத்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் மன்னர்களின் ஆதரவோடு நாடகக்கலை வளர்ச்சி பெற்றது. எனினும் தொடர்ந்து தமிழகத்தில் தோன்றிய பல்வேறு கலவரச் சூழல்கள்    இலக்கிய வடிவங்களின்     தோற்றத்தினை முக்கியப்படுத்தின. வாய்மொழி இலக்கியங்களும், சிற்றிலக்கிய வடிவங்களும் மக்களிடையே செல்வாக்குப் பெறத் தொடங்கின. தமிழ் நாடகமும் அவற்றோடு இயைந்து வடிவமாற்றம் பெறத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாகத் தமிழ் நாடகம் ‘சிற்றிலக்கிய நாடகங்கள்’ என்னும் வடிவமைப்பில் செயல்படத் தொடங்கியது. இவ்வகையில் தோற்றம் பெற்ற நொண்டி, கீர்த்தனை, பள்ளு மற்றும் குறவஞ்சி ஆகிய நாடக வடிவங்கள் பற்றிய செய்திகளை இப்பாடப் பகுதியில் பார்ப்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:10:50(இந்திய நேரம்)