Primary tabs
-
பாடம் - 3
D05143 இக்கால நாடகக்கலை
E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தமிழ் நாடகம், வேற்று மரபுகளை உள்வாங்கிப் பெற்ற மாற்றங்களையும் அரசியல் இயக்கங்களால் பெற்ற வளர்ச்சியையும் சொல்கிறது.
தற்கால நாடகக்கலை குறித்த சிந்தனைகளால் நாடக அமைப்பில் ஏற்பட்ட ஒழுங்குகளைச் சொல்கிறது. மேடை நாடகங்கள் பல வகையாக அமைந்து சமூகத்திற்குத் தொண்டாற்றுவதைச் சொல்கிறது. வானொலி, தொலைக்காட்சி என்ற ஊடகங்களின் வழி நாடகம் வளர்ந்ததைச் சொல்கிறது. சோதனை முயற்சிகளாக நாடகக்கலையில் அமைந்த மாற்றங்களைச் சொல்கிறது. இன்று அரங்கக்கலையும் உள்ளடக்கமும் இணைந்து செல்லும் நிலையைப் புலப்படுத்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழ் நாடகத்தின் பன்முக வளர்ச்சியை அறியலாம்.
- நாடக நிகழ்த்து முறைகளையும் அவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் அறியலாம்.
- அரசியல், சமூக நிகழ்வுகளில் நாடகம் ஆற்றுகிற இன்றியமையாப் பங்கினைப் பற்றி உணர்ந்து கொள்ளலாம்.
- தமிழ் மரபோடும் உலக நாடக வளர்ச்சிப் போக்கோடும் தமிழ் நாடகப் போக்கு இணைந்து செல்வதை அறிந்து கொள்ளலாம்.