தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை

        திறனாய்வாளனுடைய     பண்புகளையும் பணிகளையும் பார்த்தோம். அதன்வழித்,     திறனாய்வின்     பண்புகள் வெளிப்படுகின்றன. திறனாய்வாளனின் நோக்கமும் குறிக்கோளும் - உண்மையைத் தேடுவதாகும். நல்ல அறிவும் பயிற்சியும் கொண்டு, புறவயமான பார்வையோடு, இலக்கியத்தை அவன் அணுகவேண்டும். சரியானவற்றைத் தேர்வதிலும் தேர்வதைச் சொல்லுவதிலும், காழ்ப்பு இருக்கக் கூடாது; பக்கச் சார்பு இருக்கக்கூடாது. நடுவுநிலைமை வேண்டும். குணம் நாடிக் குற்றமும் நாடவேண்டும். படைப்புக்குத் தோழனாகவும் உசாத்துணையாகவும்     இருக்க வேண்டும். நல்லதொரு இலக்கியச்சூழலை வளர்ப்பவனாக இருக்க வேண்டும். புதிய கோட்பாடுகேளா வேறு எதுவோ ஆயினும், புரிந்துகொள்வதிலும், சொல்லுவதிலும் தெளிவு இருக்க வேண்டும். தெளிவு இருக்கும்போதுதான் வாசகரை அது சென்று அடைய முடியும். சமூகப் பொறுப்பு என்பது படைப்பாளிக்கு மட்டுமல்ல, திறனாய்வாளனுக்கும் இருக்கிறது. ஏனென்றால் திறனாய்வாளன், ஒரு சிந்தனையாளனாகவும் இருக்கிறான் - இருக்கவேண்டும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    திறனாய்வாளன், யாரை, யார் பக்கமாக ஆற்றுப்படுத்துகிறான்?

    2.

    திறனாய்வாளன் செவிலியாக இருக்கிறான், எப்படி?

    3.

    திறனாய்வில் தெளிவு வேண்டப்படுவது ஏன்?

    4.

    திறனாய்வாளனுக்கு உள்ள சமூக உறவு என்ன?

    5.

    திறனாய்வாளனுடைய சமூகப் பொறுப்பு, யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-07-2018 14:30:01(இந்திய நேரம்)