தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

    • 4.5 தொகுப்புரை
          அமைப்பியலுக்கு முந்தியதும், அதற்குப் பூர்வாங்கமாக அமைந்ததும் உருவவியலாகும். உருவத் தோற்றத்தின் நேர்த்தி மற்றும் அழகு பற்றிப் பேசுவது இதன் அடிப்படை. உருவவியல், மேலைநாட்டில்     பிறந்தாலும் தமிழ்த் திறனாய்வு உலகில் செல்வாக்குடைய ஒரு அணுகுமுறையாக இன்றும் வழங்குகிறது.
          வாழ்க்கையோடு     பின்னிப் பிணைந்ததே     தத்துவம். இலக்கியங்களிலிருந்தும் இதைக் காணலாம். மார்க்சியம் மட்டும் பொருள் முதல் என்பதை மையமாகக் கொண்டு அமைந்திருக்கிறது. மற்றவை கருத்து முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை.
          சமுதாயத்தில் மதிப்பு என்று எது கொள்ளப்படுகின்றதோ அதுவே அறமாகக் கருதப்படுகின்றது. கலையியலாகச் சமுதாயத்தை வெளிப்படுத்தும் இலக்கியத்தில் அறம் ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுகிறது. அறவியல் அணுகுமுறை     இலக்கியத்தில் வெளிப்படும் ஒழுக்க முறையை ஆராய்வதோடு இலக்கியத்தை அதனடிப்படையாகத் தரம் பிரித்தும் கூறுகிறது.
      தன் மதிப்பீடு : வினாக்கள் - II
      1)
      இந்திய சமயத் தத்துவம் எவற்றின் அடிப்படையில் உண்டாக்கப் பெற்றிருக்கின்றது?
      2)
      பாவத்தின் சம்பளம் மரணம் - எந்தச் சமயத்தின் தத்துவம் இது?
      3)
      ஆணவம் - கன்மம் - மாயை பற்றி விளக்கும் தத்துவம், விசிஷ்டாத்வைதமா? சைவ சித்தாந்தமா?
      4)
      சரணாகதித் தத்துவ மரபைப் பின்பற்றியுள்ள புகழ்பெற்ற இலக்கியம் எது?
      5)
      அறநெறி அணுகுமுறை எதனுடைய ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 19:03:42(இந்திய நேரம்)