Primary tabs
இலக்கண இலக்கிய உரையாசிரியர்களுள்
இலக்கிய உரையாசிரியர்கள் பற்றி இந்தப் பாடம் பேசுகிறது. சங்க
இலக்கியங்களுக்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கும் உரை எழுதியவர்கள்
யார், எவர் என்பதனைச் சொல்கிறது.
பத்துப்பாட்டுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரின் உரைத்திறன் பற்றிச் சொல்கிறது.
புறநானூற்றின் பழைய உரைகாரரின் உரைத்திறன் பற்றிச் சொல்கிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு உரைகண்டோரின் திறன்களைப் பேசுகிறது. பரிமேலழகரின் உரைத்திறன் பற்றி எடுத்துரைக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
தமிழ்த் திறனாய்வின் வரலாற்றில் இலக்கிய உரையாசிரியர்களுக்குப் பங்கு உண்டு. அது எத்தகையது, அதன் பண்பும் நோக்கமும் என்ன என்பதனை அறியலாம்.
-
இலக்கியங்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியாத நிலையில் - அரும்பதவுரைகாரர்கள் பழைய உரையாசிரியர்கள் பலர் இருந்தனர். அவர்களின் திறன் பற்றி இந்தப் பாடம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
இறையனார் அகப்பொருள் உரைகாரர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியவர்களின் பங்களிப்புப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
-
இலக்கிய உரைகளின் சில சிறப்பான பண்புகளும் மாண்புகளும் இத்தகையன என அறிந்து கொள்ள இப்பாடம் துணை செய்கிறது என்பதை உணரலாம்.