P10124
- சு.சமுத்திரத்தின் சிறுகதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப்
பாடம், சு.சமுத்திரத்தைப் பற்றியும் அவரது படைப்புகள்
பற்றியும் கூறுகிறது. அடுத்து, அவரது சிறுகதைகளில் இடம்
பெற்றுள்ள பாடுபொருள்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
அதன்பின்னர், அவரது சிறுகதைகளின் நோக்கையும்
போக்கையும் எடுத்துரைக்கிறது. சிறுகதைக் கலையின்
வளர்ச்சிக்குச் சமுத்திரத்தின் பங்களிப்பு இறுதியாகக்
கூறப்படுகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
சு.சமுத்திரத்தின் படைப்புகளைப்
பற்றித் தெரிந்து
கொள்வீர்கள்.
சமூக அநீதிகளை அவர் எவ்வாறு
எடுத்துரைக்கிறார்
என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
சமுதாயத்தின் மீது சமுத்திரம்
கொண்டுள்ள அக்கறையை
அறிந்து கொள்வீர்கள்.
சிறுகதைகளில் அவர் பின்பற்றியுள்ள
மொழிநடை, உத்திகள்
போன்றவற்றைத் தெரிந்து கொள்வீர்கள்.
சு.சமுத்திரம்
ஒரு சிறந்த அங்கத எழுத்தாளர் என்பதையும்
உணர்ந்து கொள்வீர்கள்.