Primary tabs
-
2.7 தொகுப்புரை
“நாவல் இன்றைய நெருக்கடி மிகுந்த சமூகச் சூழ்நிலையில் மக்களின் சிந்தனையை ஆரோக்கியமான நிலையில் ஆக்கப் பூர்வமான செயற்பாடுகளில் நம்பிக்கை கொள்ளச் செய்யும் ஓர் இனிய சாதனமாக அமைய வேண்டும்” என்ற கொள்கை கொண்ட இராஜம் கிருஷ்ணன் பெண்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தம் நாவல்களில் பேசுகின்றார். மேலும், சமுதாயத்தின் இயக்கவியலை நுணுக்கமாகக் கண்டறிந்து அந்த நோக்கில் பெண்களின் படிநிலையையும், சமுதாயத்தில் அவர் தம் வாழ்க்கைப் பாங்கினையும் தெளிவுபடுத்தியதோடு சுதந்திரமும், சமத்துவமும், சமூகநீதியும் பெண் இனத்திற்குக் கிட்ட வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.