தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 5-P10145 பொன்னீலனின் புதினங்கள்

பாடம் 5

P10145 பொன்னீலனின் புதினங்கள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் நாவல் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றவர் பொன்னீலன். சமூக வளர்ச்சிக்கான இலக்கியத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். இந்தப் பாடம் பொன்னீலனை அறிமுகம் செய்து அவர் எழுதிய புதினங்கள் வழி வெளிப்படும் அவருடைய சமுதாயப் பார்வை, பாத்திரப் படைப்பு, நடைத்திறன் ஆகியவற்றை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.

பொன்னீலனின் புதினங்கள் மூலம் மானுடப்பரப்பு முழுவதையும் அணைத்துக் கொள்கிற மனிதநேயப் பண்பினைக் காணமுடிகிறது.
இந்திய விடுதலைக்குப்பின் எழுதப்பட்ட இவருடைய நாவல்கள் பெரும்பான்மையும் மார்க்சீய கோணத்தில் எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள்.
குடும்பம், சமுதாயம் பற்றிப் பொன்னீலனின் மதிப்பீட்டை அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2018 16:38:25(இந்திய நேரம்)