தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3:6-தொகுப்புரை

  • 3.6 தொகுப்புரை

    நண்பர்களே ! இதுவரை தமிழ்விடு தூது என்ற நூலைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடம் மூலம் என்ன என்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    தமிழ்விடு தூது ஒரு தூது நூல் என்பது பற்றித் தெரிந்திருப்பீர்கள்.
    தமிழ்விடு தூது நூலின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.
    தமிழ்மொழியின் பெருமைகள் பற்றிப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
    சோம சுந்தரக் கடவுளின் பெருமைகளில் சில விளங்கி இருக்கும்.
    தலைவி பிற பொருட்களைத் தூது அனுப்பாததன் காரணம் தெரிந்து இருக்கும்.
    தலைவி தமிழிடம் தூது செல்லும் முறை பற்றிக் கூறியதைப் படித்தீர்கள்.
    தலைவி தமிழிடம் செய்யக் கூடாதவையாகக் கூறியன பற்றியும், தலைவி தலைவனைக் காணும் வழியைக் கூறியதைப் பற்றியும் அறிந்து கொண்டிருப்பீர்கள்.
    தலைவி கூறிய தூதுச் செய்தி தெளிவாகப் புரிந்து இருக்கும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    தமிழ்விடு தூது நூலில் சோமசுந்தரக் கடவுளிடம் யார் எதற்காகத் தூது விடுவதாய்க் காட்டப்படுகிறது?

    2.

    தமிழ் மொழியின் குலங்களாகக் கூறப்படுவன யாவை?

    3.

    தமிழ்மொழியின் மணப்பெண்களாகக் கூறப்படுவன யாவை?

    4.

    ஒன்பது வகைச் சுவைகள் யாவை?

    5.

    தமிழ் நாட்டின் எல்லைகள் யாவை?

    6.

    தமிழ்மொழியின் நண்பர்கள் யார்?

    7.

    எல்லாச் செல்வங்களிலும் உயர்ந்த செல்வமாக எது கூறப்படுகிறது?

    8.

    தலைவி மானைத் தூது அனுப்பாததற்கு உரிய காரணம் யாது?

    9.

    தலைவி தமிழிடம் தூது வேண்டியது யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 16:22:52(இந்திய நேரம்)