தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4:5-தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    நண்பர்களே ! இதுவரை சரபேந்திர பூபாலக் குறவஞ்சி பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள். இந்தப் பாடம் மூலம் நீங்கள் அறிந்துள்ளவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலின் பெயர்க் காரணத்தை அறிந்து கொண்டீர்கள்.
    இந்த நூலின் பாட்டுடைத் தலைவரைப் பற்றி விளக்கம் பெற்றீர்கள்.
    இந்த நூலின் ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.
    இந்த நூலின் அமைப்பை அறிந்து கொண்டீர்கள்.
    இந்த நூலில் கூறப்படும் செய்திகளை விளங்கிக் கொண்டீர்கள்,
    சில பாடல் பகுதிகளைப் படித்தீர்கள்.
    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சியின் முதற்பகுதியில் இடம்பெறும் பகுதிகள் யாவை?

    2.

    சரபேந்திரனின் உலாவைக் கண்ட பெண்ணின் பெயர் யாது?

    3.

    சரபேந்திரர் உலா வரும் வாகனம் எது?

    4.

    மதனவல்லி விளையாடிய விளையாட்டு எது?

    5.

    வெங்கோஜி மன்னனின் மற்றொரு பெயர் யாது?

    6.

    துளஜாஜி மன்னனின் விருப்பத் தெய்வத்தின் பெயர் யாது?

    7.

    மராட்டியர் குலம் எவ்வாறு அழைக்கப்படும்?

    8.

    ஏரண்டம் என்பதன் பொருள் யாது?

    9.

    சரபோஜி மன்னனின் உலாவில் உடன் வருவோர் யாவர்?

    10.

    மதனவல்லி தோழியிடம் மன்னனிடமிருந்து எதை வாங்கிவரக் கூறுகிறாள்?

    11.

    குறவனின் பெயர் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 17:17:28(இந்திய நேரம்)