Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
1.வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் குறித்து எழுதுக.
தனிப்பாடல் முதல் காவியங்கள் வரை பலவகையான செய்யுள்களும், இசைப் பாடல்களும் கவிதைகள் பலவும் வந்து புகுந்தன. முந்தைய நூற்றாண்டுகளில் தழுவலாகியனவும் தமிழில் நேரடியான, உண்மை மொழிபெயர்ப்புக்குக் களமாக அமைந்தன.
வடமொழியிலிருந்து இதிகாசங்களும், புராணங்களும், சமயச் சார்புடைய ஆக்கங்களும், வேத உபநிடதங்களும் மிகுதியாக மொழிபெயர்ப்புக்கு உட்பட்டன.