தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.8 தொகுப்புரை

    மொழிபெயர்ப்புப் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சங்க காலம் தொட்டே வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பு தொடங்கியது. அந்நூல்களின் கருத்துகளும் கதைகளும் தமிழ் நூல்களில் இடம்பெற்றன. இவ்வகையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களைப்பற்றி விரிவாக இந்தப் பாடம் தெரிவிக்கிறது. வடமொழி, பிற இந்திய மொழிகள், உலக மொழிகள் என மொழி அடிப்படையிலும், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள் முதலிய பல இலக்கிய வகைகளின் அடிப்படையிலும், தமிழில் வந்துள்ள பெயர்ப்பு நூல்களைப் பற்றி நாம் இந்தப் பாடத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் குறித்து எழுதுக.
    2.
    புதின வளத்திற்கு உலகமொழிகளின் செல்வாக்காக மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் பற்றி எழுதுக.
    3.
    சிறுகதை வளத்திற்கு மொழிபெயர்ப்பாக வந்தவை எவை?
    4.
    நாடக மொழிபெயர்ப்பில் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் பெறும் இடம் என்ன?
    5.
    இந்திய மொழிகளிலிருந்து தமிழ் பெற்ற இலக்கியங்கள் எவை?
    6.
    உலக மொழிகளிலிருந்து தமிழ் பெற்றஇலக்கியங்கள் எவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 11:45:37(இந்திய நேரம்)