தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    பிற துறை சார்ந்த மொழிபெயர்ப்பில் நிறுவனங்கள் என்னென்ன செய்துள்ளன?

    பிற துறை மொழிபெயர்ப்பு என்ற நிலையில் குறிப்பாக அறிவியல் செய்திகளை மொழிபெயர்ப்பது என்ற பணியில் ‘தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றியுள்ளன. 1954-1963 ஆகிய ஒன்பது ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் 9 தொகுதிகளாக வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தில் ஏராளமான துறைகளில் மொழிபெயர்க்கப்பட்ட செய்திகள் வெளியிடப்பட்டன.

    அதேபோன்று குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளும் பெரியசாமித் தூரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டன.

    இதே காலக்கட்டத்தில் 1954இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை மூலவடிவத்திலும் மொழிபெயர்ப்பாகவும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களும் படிக்கும் அளவிற்கு எளிய நடையில் அவை எழுதப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:07:33(இந்திய நேரம்)