Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
4.சட்டத்துறை மொழிபெயர்ப்புக் குறித்துக் குறிப்பிடுக.
நீதித்துறை தொடர்பான தீர்ப்புகளை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து, ‘தீர்ப்புத்திரட்டு’ என்ற இதழ்வாயிலாகவும், தொழிலாளர் தொடர்பான தீர்ப்புகளை ‘உழைப்பவர் உலகம்’ என்ற இதழ்வாயிலாகவும் தமிழ்பரப்பும் பணிகளை அரசு ஏற்றுள்ளது. இவ்வாறு சட்டத்துறை, ஆட்சித்துறை, நீதித்துறைகளில் தமிழ் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு கைகொடுத்து வருகிறது.
சட்டத்தைத் தமிழில் வரைபவர்கள், மொழிபெயர்ப்பு மற்றும் சட்டவரைவு முறைகள் தொடர்பாகவும், மொழி அமைப்பின் அடிப்படையில் சட்டத்தைப் பொருள் கொள்வதிலும், ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் தேடியும் இடர்ப்பட நேர்கிறது. தமிழில் சரியான அளவில் அவசரத்திற்குப் பயன்படுத்தும் வகையில் மாதிரி நூல்களோ, சட்டத் தமிழ்ச் சிறப்பு அகராதிகளோ எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை.