Primary tabs
- 4.‘திருமுகப்பாசுரம்’ சிறு குறிப்பு எழுதுக.
மதுரைச் சிவன் திருவாலவுடையார் பாடியது; சீட்டுக்கவி வகையைச் சேர்ந்தது. தன்பால் அன்புடைய பாணபத்திரன் என்ற இசைவாணனுக்கு உதவிடுமாறு சேரமன்னர் சேரமான் பெருமாள் நாயனாருக்கு விடுக்கப்பட்ட திருமுகம் இது. பாடல் ‘மதிமலிபுரிசை மாடக்கூடல்’ என்று தொடங்குகின்றது. பதினொராம் திருமுறையுள் முதலில் இடம்பெற்றுள்ளது.