சங்க காலத்திற்கும்
முற்பட்ட பழந்தமிழ்
நூலாகிய
தொல்காப்பியத்தில்
திருமாலைப்
பற்றிய குறிப்புகள்
இடம்பெறுவதையும் முல்லை நில மக்கள் திணைக்
கடவுளாகத் திருமாலைக் கொண்டதையும் சான்றுகள்
வழி விளக்குகிறது.
சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
ஆகியவற்றில் திருமாலின் புகழ் குறிப்பிடப்பட்டிருப்பதும் திருமாலின்
அவதாரங்கள் சில இடம் பெற்றிருப்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றன.