தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P202262.htm-இலக்கணம்

  • 6.2 இலக்கணம்

    வைணவப் புலவர்கள் இலக்கணம் எழுதித் தமிழ் இலக்கிய
    உலகத்தோடு இலக்கண உலகத்தையும் வளப் படுத்தியுள்ளனர்.
    ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள்
    கவிராயர் மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள்,
    திருப்பதிக்கோவை, மாறன் பாப்பாவினம்
    ஆகிய
    நூல்களை எழுதியுள்ளார்.

    6.2.1 மாறன் அலங்காரம்

    மாறன் அலங்காரம் செய்யுள் அணி வகை பற்றி
    விரித்துரைக்கின்றது. மேற்கோள்களாகத் தம் வழிபடு
    தெய்வத்தோடு தொடர்புடைய செய்யுள்களைக் காட்டுவதன்
    மூலம் சமயப் பணியோடு தமிழ்ப்பணியும் செய்துள்ள பாங்கை
    அறிய முடிகின்றது. இந்நூலின் உரை ஆசிரியர் பேரை காரி
    ரத்தினக் கவிராயர்.

    கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணிஞானம,் சென்னிக்கு
    (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல்,
    இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு
    கடவுளாகக் காட்டுகிறது. இந்நூல்.

    6.2.2 மாறன் அகப்பொருள்

    மாறன் அகப்பொருள் என்பது தமிழ் அகப்பொருள்
    இலக்கண நூல்களுள் வைணவரால் இயற்றப்பட்ட நூல்,
    ஆசிரியரின் இயற்பெயர் சடையன். வழக்கப்படி மன்னர்
    அல்லது வள்ளல் முன்பு நூல் அரங்கேற்றம் செய்யப்படும்
    இந்த முறையை மாற்றி, இந்நூல் ஆழ்வார் திருநகரியில்
    வாழ்ந்த திருப்பதி சீனிவாச அய்யர் முன்பு கி.பி. 1522-இல்
    அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழி இலக்கண
    நூலில் மேற்கோள் வடிவத்தில் சமயம் இடம்பெறத்
    தொடங்கிய முறையை அறிகின்றோம். எனவே சமயம் சார்ந்த
    ஒருவர் முன்பு அரங்கேறுவது அவசியமாகிவிட்டது என்பதைத்
    தெரிந்து கொள்கின்றோம்.

    இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக்
    கோவை
    ஆகும்.

    6.2.3 மாறன் பாப்பாவினம்

    பாவும், பா இனமும் பற்றிய நூல் ஆதலின் பாப்பாவினம்
    (பா+பாஇனம்) எனப் பெயர் பெற்றது. இந்நூலில் உள்ள
    பாடல்கள் வைணவ சமயத்தின் பெருமையைப் பறை
    சாற்றுபவை; சமய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.

    இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி
    ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும்
    என்பதற்குச் சான்றாக - ஆவணமாக - இந்நூலில் உள்ள
    140 பாடல்கள் அமைந்துள்ளன.

    6.2.4 திருப்பதிக் கோவை

    திருவரங்கத்தமுதனார்     பாடியுள்ள திருப்பதிக் கோவை
    வைணவத் திருத்தலங்களான 108 திவ்விய தேசங்களை
    40 கண்ணிகளில் தொகுத்துக் காட்டுகின்றது.

    அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும்,
    சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், .... வேதம்
    உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார்
    பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.

    • மும்மணிக் கோவை

    திருக்குருகைப்     பெருமாள்     கவிராயர் நம்மாழ்வார்
    மும்மணிக்கோவை இயற்றியுள்ளார். வேதாந்த தேசிகர் ஒரு
    மும்மணிக்கோவை அருளியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:40:19(இந்திய நேரம்)