முதல் குறிப்பால் பெயர் பெற்றவை
அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை
முதற் குறிப்பாலும் அந்தாதித் தொடையாலும்
-
மடல், அந்தாதி, மாலை, பள்ளி எழுச்சி
போன்ற பிரபந்தங்களின் தொகுப்பு நாலாயிரத்
திவ்வியப் பிரபந்தம்.
-
ஆழ்வார்கள் வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு
குலங்களில் பிறந்தவர்கள் எனினும் பக்தி
என்னும் சரடு அவர்களை இணைத்தது.
-
திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும்
இறைவனின் திருமேனி அல்லது திருமூர்த்தி
‘அர்ச்சை’ என்று அழைக்கப்பட்டது. அதைப்
போற்றிப் பாடுவது ‘அர்ச்சாவதார ஈடுபாடு’
எனப்பெயர் பெற்றது.
-
மனிதனைக் கொண்டாடும் காலம் மாறி,
இறைவனைப் போற்றும் காலம் வரும் போது,
இறைவனுக்கு மனிதப் பண்பை ஏற்றினர்.
மக்களுக்குத் துன்பம் வரும் போது இறைவன்
துயரம் தீர்ப்பான்; அடியவர்களுக்கு அருள்
வழங்குவான். எனவே மனித உருவில் அவதாரம்
எடுத்து, அவன் செயல்பாட்டால் அறத்தை,
தர்மத்தைக் காப்பதாகக் காட்டினர்.
-
ஆழ்வார்கள் பாடியதாக வைணவர்கள் போற்றும்
திருத்தலங்கள் திவ்விய தேசம் எனப்படும்.
அவை 108 ஆகும். அவற்றுள் திருப்பாற்கடல்,
திருப்பரமபதம் (வைகுண்டம்) ஆகிய 2
நீங்கலாக 106 உள்ளன. அவற்றுள் 12 தவிர
ஏனையவை (94) தமிழ்நாட்டில் உள்ளன.
-
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின்
தனியன்கள் பிரபந்தங்களின் நோக்கத்தை,
கனிச்சாறுபோலச் சுருக்கிக் காட்டும்
சிறப்பிற்குரியவை.