Primary tabs
1.0 பாட முன்னுரை
தமிழ்க் கவிதைக்கு நெடிய வரலாறு உண்டு. பல்வேறு சமயங்களைச் சேர்ந்த கவிஞர்கள் காலந்தோறும் தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்துள்ளனர். இந்த வகையில் கிறித்தவக் காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்துள்ளன. இது போன்றே இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவக் கவிதைகளும் தமிழ்க் கவிதைக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. கிறித்தவச் சிந்தனைகளைத் தழுவிய இக்காலக் கவிதைகள் இந்தப் பாடத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், கிறித்தவ வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றியும் இந்தப் பாடத்தில் கூறப்படுகிறது.