Primary tabs
-
3.0 பாட முன்னுரை
சிறுகதை எனும் படைப்பிலக்கியம் மக்களின் கதை கேட்கும் ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில் எழுந்தது. மக்களின் கதைகேட்கும் ஆர்வத்திற்குச் சிறுகதைகளின் கதைப்பொருளே காரணமாகிறது. இக்கதைப் பொருள் மக்களை இன்புறுத்தவும், அறிவுறுத்தவும் துணை நிற்கிறது. சிறுகதைகளின் கதைப்பொருள் என்பது குண்டூசி முதல் குமரிமுனை வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்க வேண்டும். அப்படிக் குறிப்பிட்ட வரையறைக்குள் கதைப்பொருள் அடக்கப்படும் நிலையில்தான் அது கருப்பொருளாகிறது. இப்பாடத்தில் சிறுகதையின் கருப்பொருள் மற்றும் அது பெறும் இடத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.