தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 3.6 தொகுப்புரை

    தொன்மை நாடகப் போக்குகளிலிருந்து விடுபட்டதாகத் தற்கால நாடகப் போக்குகள் உள்ளன.

    புராண, இதிகாச நாடகங்கள், நாடகம் முழுவதும் பாடல்கள் என்ற தொன்மைப் போக்கின் பிடியிலிருந்து தற்கால நாடகங்கள் விலகின.

    சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி அ.மங்கை வரை புதிய நாடகப் போக்குகள் பல திசைகளிலும் பயணம் செய்யக் காண்கிறோம்.

    ஒளி, ஒலி, ஒப்பனை, விளம்பரம், கதையமைப்பு,  காட்சியமைப்பு, மேனாட்டுத் தாக்கம் எனப் பல நிலைகளிலும் தற்கால நாடகங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன.

    நவீன நாடகங்கள் அரங்குகளை விட்டு மக்களைத் தேடிச் செல்கிறது. பெண்கள் நாடக ஈடுபாடு கொண்டு நாடகத்தில் நடிக்கின்றனர்.

    சபா நாடகங்கள் பெருகி வருகின்றன. அயலகத் தமிழர்கள் உலகெங்கும் நாடகங்களை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களும் நாடகத் துறைகளை ஏற்படுத்தியுள்ளன.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    ‘நாற்காலிக்காரர்’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

    2.

    மு.இராமசாமியின் எந்த நாடகம் தேசிய விழாவிற்குத் தேர்வு பெற்றது?

    3.

    சிறுவர்களுக்காக நாடகம் இயக்குபவர் யார்? அவருடைய குழுவின் பெயர் என்ன?

    4.

    தலித் நாடக அரங்கில் குறிப்பிடத்தக்கவர் யார்?

    5.

    அயலக நாடகவியலாளர் இருவர் பெயரைச் சுட்டுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 13:52:55(இந்திய நேரம்)