Primary tabs
-
3.1 இதழியல் கலைச்சொற்கள்
முன்னரே கூறியபடி இதழியல் என்பது புதுமையும் பொதுமையும் உடைய ஒரு துறை ஆகும். ஆகவேதான் இதழியல் கலைச்சொற்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு விளக்கம் தரப்படுகின்றன. அடைப்புக் குறிக்குள் ஒலிபெயர்ப்பு முறையில் (Transliteration) பல இதழியல் கலைச்சொற்கள் தமிழில் சுட்டப்படுகின்றன.
இதழியல் கலைச்சொற்களை ஒன்றன் பின் ஒன்றாகக் காண்போம்.
- A Copy (ஏ காப்பி)
இதனை A Matter என்றும் கூறுவர். முதலில் வெளியான செய்தியோடு தொடர்புடைய விளக்கமாக அமையும். இதனைத் தனித் தலைப்பிட்டும் வெளியிடலாம்.
- Add (ஆட்)
Add (ஆட்) என்பது, முன்பே வந்துள்ள செய்தியோடு புதிதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் விவரம்.
- Agency (ஏஜென்ஸி)
நியூஸ் ஏஜென்ஸி என்றும் இதனைக் கூறுவர். தனியார் மற்றும் அரசுத் துறைகளில் செய்திகளைச் சேகரித்துத் தருவதற்காகச் செயல்படும் அமைப்புகள் செய்தி நிறுவனங்கள் எனத் தமிழில் அழைக்கப்படுகின்றன.
செய்தி நிறுவனங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் செய்திகளைத் திரட்டும் நிருபர்களிடமிருந்தும் பிற செய்தி நிறுவனங்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டும் செய்திகளைத் திரட்டித் தருகின்றன. செய்தி இதழ்கள் இந்தச் செய்தி நிறுவனங்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்து செய்திகளைப் பெறுகின்றன.
எ.கா :
P.T.I
-
Press Trust of India
U.N.I
-
United News of India
- All in (ஆல் இன்)
இது தமிழில் கையிருப்பு; பிழைதிருத்துவோர் பயன்படுத்தும் கலைச்சொல். இதழ்களில் இடம்பெற வேண்டிய செய்திகளைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகளும் அச்சுப் பிரதிகளும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் கலைச்சொல்.
- All of (ஆல் ஆஃப்)
தயாரான பக்கம். அனைத்துச் செய்திகளும் சரிபார்க்கப்பட்டுத் திருத்தப்பட்டு அச்சிடுவதற்குத் தயாரான நிலையில் உள்ளதைக் குறிப்பிடுவது இக்கலைச்சொல்.
- All out (ஆல் அவுட்)
கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் செய்தி இதழ்களில் இடம் பெற்றுவிட்டன. ஏதும் விடுபடவில்லை என்பதனைக் குறிப்பிடுவது இக்கலைச்சொல்.
- All rights reserved (ஆல் ரைட்ஸ் ரிசர்வ்ட்)
பதிப்புரிமையைக் குறிப்பிடும் கலைச்சொல், பதிப்புரிமை எனப்படும்.
ஒருவரது வெளியீட்டிலிருந்து செய்தி/கருத்து முதலியவற்றை எடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்பதைக் குறிப்பிடும் சொல் (Copy rights) காப்பி ரைட்ஸ் என்றும் குறிப்பிடுவர்.
- Alteration (மாற்றம்)
இதழ்களுக்கு உரிய செய்திகள் தாங்கியுள்ள கையெழுத்துப் பிரதியில் இல்லாததை, அச்சுப் பிரதியில் எழுதிச் சேர்ப்பது Alteration எனப்படும்.
- Angle (கோணம்)
வெளியாகும் செய்தியில் எதனை முன்னிலைப்படுத்துவது என்பதைக் குறிப்பிடும் சொல் Angle எனப்படும்.
- Anonymous News (மொட்டைச் செய்தி)
ஊர், பெயர், ஏதும் இன்றி ஆதாரம் இல்லாமல் வெளியாகும் செய்திகள் மொட்டைச் செய்திகள் எனப்படும்.
- Art Editor (கலைப்பகுதி ஆசிரியர்)
- Assembly Reporter (சட்டமன்ற நிருபர்)
- Assignment (அஸைன்மென்ட்)
- Banner (பேனர்)
- Beat (பீட்)
- Big News Paper (பெரிய நாளிதழ்)
- Bit News (துணுக்குகள்)
- Blind Spot (பார்வை படா இடம்)
- Blow-up (படப் பெருக்கம்)
- Box Story (பெட்டிச் செய்தி)
- Bulletin (புல்லட்டின்)
- By line (பெயர் வரி)
- Caption (படத் தலைப்பு)
- Caricature (கேலிச் சித்திரம்)
- Cartoon (கருத்துப் படம்)
- Censorship (தணிக்கை)
- Circulation (சர்க்குலேஷன்)
- City News (உள்ளூர்ச் செய்திகள்)
- Clip (or) Cuttings (செய்தித் துணிப்பு)
- Column (காலம்)
- Continuity (தொடர்ச்சி)
- Copy (கைப்பிரதி)
- Coverage (கவரேஜ்)
- Cover Story (கவர் ஸ்டோரி)
- Crime News (குற்றச் செய்தி)
- Date Line (தேதி வரி)
- Dead Line (டெட் லைன்)
- Delete (நீக்குக)
- Derogatory News (டெராகேட்டரி நியூஸ்)
- Dirty Proof (டர்ட்டி புரூப்)
- Digest Magazine (திரட்டு இதழ்)
- Dummy (டம்மி)
- Ear Panel (காது விளம்பரம்)
- Edition (பதிப்பு)
- Editor (ஆசிரியர்)
- Editorial (தலையங்கம்)
- Eight Column News (எட்டுப் பத்திச் செய்தி)
- Exchange Copies (மாற்றுப் பிரதி)
- Exclusive (சிறப்புச் செய்தி)
- Expected News (எதிர்நோக்குச் செய்திகள்)
- Fake (பொய்ச் செய்தி)
- Filler (இட நிரப்பி)
- Flag (இதழ் முகம்)
- Flash (உடனடிச் செய்தி)
- Follow-up (தொடர் செய்தி)
- Foreign Correspondent (வெளிநாட்டு நிருபர்)
- Free Lancer (ஃபிரீ லான்சர்)
- Ghost Writer (கோஸ்ட் ரைட்டர்)
- Head Lines (செய்தித் தலைப்புகள்)
- Hot News (சூடான செய்திகள்)
- Illustration (விளக்கப்படம்)
- In Hand (கையிருப்புச் செய்தி)
- Interview (பேட்டி)
- Issue (வெளியீடு)
- Journalist (இதழியலாளர்)
- Jump (தொடர்ச்சி)
- Label (உயிரற்ற தலைப்பு)
- Late News (கடைசிச் செய்தி)
- Lead (செய்திச் சாரம்)
- Libel News (அவதூறுச் செய்தி)
- Lobby Correspondent (நாடாளுமன்றச் செய்தியாளர்)
- Magazine (பருவஇதழ்)
- Margins (வெற்றிடம்)
- Mass Media (மக்கள் தகவல் தொடர்புச் சாதனம்)
- Matter (இதழ்ச் செய்தி)
- Morgue (இதழியல் நூலகம்)
- News (செய்தி)
- News Bank (செய்தி வங்கி)
- News Source (செய்தி மூலம்)
- Night Editor (இரவு இதழாசிரியர்)
- Press-Conference (செய்தியாளர் கூட்டம்)
- Proof-Reader (புரூஃப்ரீடர்)
- Proximity (வட்டாரத் தன்மை)
- Reporters (நிருபர்கள்)
- Royalty (ராயல்டி)
- Smash (கவர்ச்சியான செய்தி)
- Spot News (ஸ்பாட் நியூஸ்)
- Stringer (பகுதிநேர நிருபர்)
- Sub-Editor (ஸப் எடிட்டர்)
- supplement (இணைப்பு வெளியீடு)
- Tabloid (சிற்றிதழ்கள்)
- Trim (டிரிம்)
- Zero Hour (ஜீரோ ஹவர்)
இவர், இதழ்களில் வெளியாகும் புகைப்படங்கள், ஓவியங்கள், வண்ணங்கள் முதலியவற்றிற்குப் பொறுப்பானவர்.
இவர், சட்டமன்ற நிகழ்வுகளைச் சேகரித்து இதழ்களுக்குத் தருபவர்.
குறிப்பிட்ட செய்திகளைச் சேகரிக்க இதழாசிரியர் நிருபருக்குத் தரும் பணி ஆணை Assignment எனப்படும்.
Banner என்பது தலைப்புச் செய்தி. ஓர் இதழின் முதல் பக்கத்தில் பெரிய அளவில் வெளியாகும் முக்கியச் செய்தியின் தலைப்பு.
ஒரு நிருபர் வழக்கமாகச் சென்று செய்தியைத் திரட்டும் இடம் Beat எனப்படும். ஒரு செய்தித்தாளுக்குச் சொந்தமான ஒரு செய்தியையும் இக்கலைச்சொல் குறிப்பிடும்.
50,000 பிரதிக்கு மேல் அச்சாகின்ற நாளிதழைப் பெரிய நாளிதழ் என்பர்.
சான்று : தி ஹிந்து
செய்திகளைச் சுருக்கி நான்கு அல்லது ஐந்து வரிகளில் எழுதுவதை Bit News என்பர்.
பார்வை படா இடம் என்பது ஓர் இதழின் இடப்பக்க மூலை. இந்த இடம் வாசகர்களின் பார்வையில் படாத இடமாகும்.
சாதாரண அளவை விடப் பெரிதாக்கிப் புகைப்படத்தை வெளியிடுவதை புளோ-அப் என்பர்.
செய்திக் கட்டுரையோடு தொடர்புடையதான கூடுதல் செய்தியைத் தனியாகத் தொகுத்துக் கட்டம் கட்டி வெளியிடுவதைப் பெட்டிச் செய்தி என்பர்.
மிகப்பெரிய மாநாடுகள், கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, அந்நிகழ்வுகள் பற்றி அவ்வப்பொழுது தொகுத்துத் தனியாகச் செய்தித்தாள் போன்று வெளியிடுதல் Bulletin எனப்படும் .
செய்தியையோ கட்டுரையையோ எழுதியவரின் பெயர், செய்தி ஆகியவற்றைக் கட்டுரையின் மேற்பகுதியிலோ அல்லது முடிவிலோ வெளியிடுவது பெயர் வரி எனப்படும்.
படத் தலைப்பு என்பது புகைப்படம், கருத்துப்படம், வரைபடம் பற்றிய சுருக்கமான விளக்கத் தலைப்பு ஆகும்.
அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தில் முக்கியப் பிரமுகர்களின் தோற்றத்தை நகைச்சுவையுணர்வு மிளிர மிகைப்படுத்திச் சித்திரிக்கும் படம் கேலிச் சித்திரம் ஆகும்.
அரசியல், சமுதாய நிகழ்வுகள் முதலியவற்றைப் பற்றிய எண்ணங்களை நையாண்டியாக வெளிப்படுத்தும் படம் கருத்துப் படம் ஆகும்.
இது செய்தித் தணிக்கையைக் குறிக்கும். மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம் பெறும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அரசால் செய்யப்படும் தணிக்கை.
இஃது இதழ்களின் விற்பனை எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பெரிய இதழ் என்றும், சிறிய இதழ் என்றும் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
City News என்பதை Local News என்றும் அழைப்பர். நாளேடுகளில் குறிப்பிட்ட பக்கங்களை இதற்கென ஒதுக்குவர்.
இதழ்கள் வெளியிடும் செய்திகளில் தேவையற்றவைகளை நீக்குதலே செய்தித் துணிப்பு எனப்படும்.
இதைப் பத்தி எனலாம். செய்தி இதழ்களின் முழுப் பக்கமும் நீளவாக்கில் 6 அல்லது 8 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். எட்டுப் பத்தி எனில் ஒரு பத்தியின் அகலம் 4.8 செ.மீ ஆகவும், ஆறு பத்தி எனில் 7 செ.மீ ஆகவும் பிரிக்கப்பட்டிருக்கும்.
நாளேடுகளில் தொடராக வெளிவரும் படக்கதை அல்லது நாவலின் தொடர்ச்சி சரிபார்த்தலைத் தொடர்ச்சி அல்லது Continuity என்பர்.
சான்று : தினத்தந்தி - சிந்துபாத்.
இது, வெளியிடுவதற்காகத் தரப்படும் கையெழுத்துப் பகுதி அல்லது தட்டச்சு செய்யப்பட்ட பகுதி.
இது செய்தி சேகரித்தலைக் குறிக்கும். குறிப்பிட்ட நிகழ்ச்சியை முதல் நாளில் இருந்து நடந்து முடியும்வரை ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனித்து, சேகரித்து, செய்தியாக வெளியிடுவது.
சான்று
:
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது செய்திகள் வெளியிடுவது.
அட்டைப் படமாக வெளியிடப்படும் படம் பற்றி விளக்கமாக எழுதுவது கவர் ஸ்டோரி ஆகும். இவ்விளக்கம் செய்திக் கட்டுரையாகவோ கதையாகவோ அமையலாம்.
இது, குற்றங்கள் தொடர்பான செய்திகளைக் குறிக்கும்.
ஒரு செய்தி நிகழ்ந்த தேதி, இடம் போன்றவற்றைக் குறிப்பிடுவது தேதி வரி ஆகும்.
குறிப்பிட்ட நேரத்தைக் குறிக்கப் பயன்படும் சொல் Dead Line ஆகும். செய்தியை வெளியீட்டிற்கு வழங்கக் கொடுத்திருக்கும் கால வரையறை.
செய்தியைச் செம்மையாக்கும் போது அச்சுப்பிரதியில் குறிப்பிட்ட பகுதியை நீக்குதலை இது குறிக்கிறது.
முரணான செய்திகள், அவமரியாதை உண்டாக்கும் செய்திகள்.
இது, பிழைகள் மிகுந்த பிரதி. அடித்தல் திருத்தம் அதிகமுள்ள படிக்க முடியாத பிரதி.
செய்திகளைத் திரட்டி, செய்தித் துணுக்குகளாக வெளியிடும் இதழ் திரட்டு இதழ் ஆகும். தமிழில் கல்கண்டு வார இதழைக் குறிப்பிடலாம்.
இது மாதிரிப் பக்கம். இதழ் வெளியாவதற்கு முன்னதான மாதிரிப் பக்கம்.
ஓர் இதழின் (நாளிதழ்) முதல் பக்கத்தில் மேல்புறத்தில் உள்ள வலது இடது ஓரங்களில், இதழ்ப் பெயரின் இருபுறமும் வெளியாகும் விளம்பரமே காது விளம்பரம் ஆகும்.
ஓர் இதழில் ஒரே நாளில் வெளியாகும் பதிப்புகள். முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு, தனிப்பதிப்பு, விசேடப் பதிப்பு முதலியவை.
ஆசிரியர் என்பது இதழாசிரியரைக் குறிக்கும். வெளியாகும் எல்லாப் பகுதிகளுக்கும் இவர் பொறுப்பானவர்.
அரசியல், சமூக நிகழ்வு பற்றி ஓர் இதழின் தனிப்பட்ட கருத்தை அதன் ஆசிரியர் எழுதி வெளியிடும் பகுதியே தலையங்கம் ஆகும்.
இன்றியமையா நிகழ்வை இதழ்களின் முழுப்பக்கத்தில் வெளியிடுவர். இதனை எட்டுப் பத்திச் செய்தி என்பர்.
பிறரது இதழ்களுக்குத் தமது இதழ்களை அனுப்பி அவர்களது இதழ்களைப் பெறுவதை மாற்றுப் பிரதி என்பர்.
பிற இதழ்களுக்குக் கிடைக்காமல் குறிப்பிட்ட இதழுக்கு மட்டும் கிடைக்கிற செய்தி சிறப்புச் செய்தி ஆகும்.
விழாக்கள், விளையாட்டுகள், நாடகம், அரசியல் நடைமுறைகள் பற்றிய தகவல்களை முன்னமே அறிந்து தக்க ஏற்பாட்டுடன் சேகரிக்கப்படும் செய்திகள் எதிர்நோக்குச் செய்திகள் எனப்படும்.
இதனை False News என்பர். நடைபெறாத நிகழ்வை யூகத்தின் அடிப்படையில் வெளியிடுவது.
செய்திகளுக்கு இடையே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கான செய்தித் துணுக்குகள் இட நிரப்பிகள் எனப்படும்.
இதழ் முகம் முதல் பக்கத்தில் வெளியாகும் இதழின் பெயர் ஆகும்.
மிக இன்றியமையாத செய்தி பற்றித் தரும் முதல் குறிப்பு Flash அல்லது உடனடிச் செய்தி எனப்படும்.
முதல் நாள் வெளியான செய்தியின் தொடர்ச்சியை வெளியிடுவது தொடர் செய்தி எனப்படும்.
சான்று
:
சார்க் உச்சி மாநாடு பற்றிய செய்தி மாநாடு முடியும் வரை தொடர்ந்து வெளியாவது.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் குறிப்பிட்ட இதழ்களுக்காகச் செய்தி சேகரித்து அனுப்புவர். அவ்வாறு செய்பவர் வெளிநாட்டு நிருபர் என்று குறிப்பிடப்படுகிறார்.
இவர், தன்னிச்சையான எழுத்தாளர். குறிப்பிட்ட இதழ்களில் பணியாற்றாமல், விருப்பம் போல எல்லா இதழ்களுக்கும் எழுதுபவர்.
இவர், வேறு ஒருவருக்காகக் கட்டுரை, கதை, கவிதை போன்றவற்றை அவரது பெயரில் எழுதித் தருபவர்.
செய்திக்கு மேல் பெரிய எழுத்துகளில் அமைக்கும் தலைப்புகள் செய்தித் தலைப்புகள் ஆகும்.
சில இன்றியமையா நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிடும் செய்திகள் சூடான செய்திகள் என்று அழைக்கப்படும்.
சான்று : தேர்தல் முடிவு பற்றிய செய்திகள்.
இதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் பற்றி விளக்குவதாக உள்ள படம் விளக்கப்படம் ஆகும்.
இதழ்களில் வெளியிடுவதற்குத் தயாராக உள்ள செய்திகளை இவ்வாறு குறிப்பர்.
சமுதாயத்தில் குறிப்பிடத்தகுந்த ஒருவரைப் பற்றிய உரையாடல் அல்லது அவரிடம் உரையாடுவதன் மூலம் கருத்துகளைப் பெறும் முறைகளுள் ஒன்று பேட்டி ஆகும்.
இது, ஒவ்வொரு முறையும் வெளியாகும் இதழ்கள் குறித்துக் குறிப்பிடுகிறது.
இதழ்களில் பணியாற்றுபவர் இதழியலாளர் எனப்படுவர்.
செய்தியின் தொடர்ச்சி அதே பக்கத்தில் அமையாது மற்றொரு பக்கத்தில் அமைவது Jump அல்லது தொடர்ச்சி எனப்படும்.
வழக்கமாக வெளியாகின்ற பகுதிகளின் ஒரே மாதிரியான தலைப்புகளை உயிரற்ற தலைப்பு என்பர். இவை புதுமையானவையாக இருப்பது இல்லை.
சான்று :
மங்கையர் மலர் இதழில் ‘இந்த மாதம் எப்படி?’ என வருகின்ற சோதிடப் பகுப்புத் தலைப்பு.
இவை, செய்தித்தாள் உருவாக்கத்தின் கடைசி நேரத்தில் கிடைக்கும் செய்திகள்.
இது, வெளியிடும் செய்தியின் முக்கியமான தகவல்களைச் சுருக்கமாக வெளியிடும் முதல் பத்தி. இதனை ‘Intro’ எனவும் அழைப்பர்.
இவை, ஒருவரைப் பற்றி உண்மையில்லாத - அவதூறாக வெளியாகும் -செய்திகள்.
இவர், நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் போது அங்கேயே இருந்து செய்திகளைச் சேகரிப்பவர்.
இதன் விளக்கத்தைப் படம்-2-இல் காணலாம்.
இஃது இதழ்களின் விளிம்பைச் சுற்றியுள்ள வெற்றிடம்.
மக்கள் தகவல் தொடர்புச் சாதனங்களாக இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
இதழ்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள், கதைகள், படங்கள் அனைத்தும் மேட்டர் என்று சுட்டப்படுகின்றன.
ஒவ்வொரு இதழ் அலுவலகத்திலும் தனிப்பட்ட நூலகம் உண்டு. இந்நூலகத்தில் அவர்கள் இதழ் தவிர, பிற இதழ்கள், நூல்கள் முதலியன சேகரித்து வைக்கப்படும்.
இஃது உலகம் முழுவதும் உள்ள செய்திகளைக் குறிக்கும். North, East, West. South என்ற சொற்களின் முதலெழுத்துக்களைக் கொண்ட சுருக்கம்.
இதழ் அலுவலகத்தில் இன்றியமையாச் செய்திகளைச் சேகரித்து வைக்கும் அமைப்பு செய்தி வங்கி ஆகும்.
செய்தி கிடைக்கும் இடம். சட்டமன்றம், காவல் நிலையம், மருத்துவமனை போன்ற குறிப்பிட்ட பொது இடங்களுக்குச் சென்று நிருபர்கள் செய்தி சேகரிக்கும் இடம்.
இவர், அதிகாலையில் வெளியாகும் செய்தித்தாளுக்கு இரவு நேரத்தில் பொறுப்பாக உள்ள இதழாசிரியர்.
அரசியல், சமூகத் தலைவர்கள் செய்தியாளர்களை ஒருங்கிணைத்துத் தகவல்களை அறிக்கைகளாக வெளியிடுவர். இதைச் செய்தியாளர் கூட்டம் என்பர்.
இவர், அச்சிட்ட இதழ்களின் பிரதியைத் திருத்துபவர்.
வெளியாகும் செய்திகள் நெருங்கியதாகவும் உள்நாடு சார்ந்தும் வட்டாரத் தன்மையுடனும் இருக்கும்.
செய்தி சேகரிப்பாளர். நாளேட்டிற்குத் தேவையான செய்திகளை நேரடியாகத் திரட்டித் தருபவர்கள். இவர்கள் செய்தி மூலங்களான காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், அரசுத்துறைகள் போன்றவற்றிற்குச் சென்று செய்திகளை உடனுக்குடன் திரட்டித் தருவர்.
உள்ளூரில் நடைபெறுகின்ற செய்திகளைத் திரட்டித் தருபவர் உள்ளூர் நிருபர் என்றும், வெளியூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் திரட்டி அனுப்புபவர்கள் வெளியூர் நிருபர் என்றும் அழைக்கப்படுவர்.
இதழ்களில் வெளிநாடுகளிலும் நிருபர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் அஞ்சல் வழியாகவோ, தந்தி, தொலைபேசி, இணையத்தளம் வழியாகவோ செய்திகளை அனுப்புவர்.
இன்றியமையா நிகழ்வுகளின் போது சிறப்பாகச் சிலர் நியமிக்கப்படுவர். இவர்களைச் சிறப்பு நிருபர் என்பர்
இது புத்தகம் வெளியானதும் ஆசிரியருக்குப் பதிப்பகத்தார் வழங்கும் பங்குத் தொகை.
திரைப்படம் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடலாம்.
நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து உடனுக்குடன் பெறும் செய்தி.
இதழ்களில் பகுதி நேரமாகப் பணியாற்றும் நிருபர்கள் பகுதிநேர நிருபர்கள் ஆவர்.
இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் ஸப் எடிட்டர் என்று அழைக்கப்படுவர்.
தீபாவளி, பொங்கல் முதலிய பண்டிகைகளின் போது இதழ்கள் வெளியிடும் மலர்கள்.
குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சென்று சேரும் இதழ்கள் சிற்றிதழ்கள் எனப்படும்.
குறைத்தல். செம்மையாக்கத்தின் போது செய்தியைத் தேவையானவாறு செறிவூட்டுவது டிரிம் எனப்படும்.
செய்தி பெறுவதற்கான இறுதி நேரம் .