Primary tabs
-
பாடம் - 5
P20435 இதழ்களில் துணுக்குகள்இந்தப் பாடம் என்ன சொல்கிறது?இந்தப் பாடம் இதழ்களில் துணுக்குகள் பெறும் இடம் பற்றியதாகும். துணுக்குகள் எவற்றைப் பற்றியெல்லாம் வருகின்றன என்பது பற்றியும், அவற்றின் செயல்பாடுகள், அவற்றின் நகைச்சுவைத் தன்மைகள், அவற்றின் நன்மை தீமைகள் முதலியன குறித்தும் விளக்க இருக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறமுடியும்.
- துணுக்குகள் என்றால் என்ன என்பதை அறிய முடியும்.
- துணுக்குகளின் வகைகள் பற்றி அறியலாம்.
-
துணுக்குகள் புதிய கருத்து அடிப்படையில் நிறைய வருகின்றன என்று அறிய முடியும்.
-
துணுக்குகள் நகைச்சுவைத் தன்மை சார்ந்தவை என்று அறியலாம்.
-
துணுக்குகள் - அரசியல், பொருளியல், சமூகம், அன்றாட நடைமுறைகள், திரைப்படம், தகவல் தொடர்புகள், சிந்தனைத் தூண்டல்கள் முதலிய பலவற்றையும் தழுவிச் செல்வதை உணரமுடியும்.
-
துணுக்குகளில் இழையோடும் நகைச்சுவையின் தன்மைகள் மக்களை ஈர்க்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
-
துணுக்குகளின் கதைத் தன்மைகள், படங்கள் முதலியவற்றின் பயன்பாடுகள் பற்றியும் இவற்றின் நன்மை, தீமைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
- துணுக்குத் தோரணம் என்றால் என்ன என்று அறிய முடியும்.