தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P2043-P20436 இதழ்களில் விளம்பரம்

  • பாடம் - 6
    P20436 இதழ்களில் விளம்பரம்

    E
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மக்களை உலகமயமாக்கத்தை நோக்கி இட்டுச் செல்வதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் விளம்பரங்களுக்கு அதிக இடம் உண்டு. ‘விளம்பர யுகம்’ என்று கருதப்படும் இன்றைய நாளில் இதழ்களில், விளம்பரங்கள் பெறும் இடம் பற்றியும், அதன் வகைகள், தன்மைகள் பற்றியும் இப்பாடத்தில் அறியலாம்.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் கீழ்க்காணும் பயனும், திறனும், அறிவும் பெறமுடியும்.

    • ‘விளம்பரம்’ என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.
    • விளம்பர வகைகள் எவை என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    • விளம்பர ஊடகங்கள் எவை என்பது பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

    • இதழ்களில் விளம்பரங்கள் பெறும் இடம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • எவற்றின் அடிப்படையில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

    • விளம்பர நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
    • விளம்பரமும் இதழ்களின் வளர்ச்சியும் பிணைந்திருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

    • விளம்பரம் மக்களுக்கு ஏற்படுத்தும் நன்மை தீமைகளை அறியலாம்.



புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:17:15(இந்திய நேரம்)