தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4 விளம்பர முகவர் நிறுவனங்கள்

  • 6.4 விளம்பர முகவர் நிறுவனங்கள் (Advertisement Agencies)

    வணிகர்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்படுபவர்கள் விளம்பர நிறுவனத்தாரும், முகவர்களுமே ஆவர். அனைவரையும் கவரும் வகையிலும், விற்பனையைத் தூண்டும் வகையிலும் விளம்பரத்தை வடிவமைத்து அதற்கேற்ற இதழ்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிடம் இந்நிறுவனத்தார் கொடுக்கின்றனர். செய்தித் தாளிடம் இவர்கள் அதற்கேற்ற தரகுத்தொகை (கமிஷன்) பெறுகின்றனர். வணிகர்களிடமும் கட்டணத் தொகை பெறுகின்றனர். விளம்பரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்று இவர்கள் ஆலோசனை வழங்குவர். இந்திய விளம்பர முகவர் சங்கம் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய விளம்பரக் கழகம் (Indian Council of Advertisement) விளம்பரம் பற்றிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கும். ABC எனப்படும் Audit Bureau of Circulation இதழ்களுக்கும் விளம்பரம் செய்வோருக்கும் இடையே பாலமாக விளங்குகிறது. இந்திய விளம்பரக் கழகம் மூலம் மைய அரசு விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. மக்கள் தொடர்புத் துறை மூலம் மாநில அரசு விளம்பரம் அளிக்கிறது.

    விளம்பரம் இன்றேல் வளர்ச்சி இல்லை, வணிகம் இல்லை என்ற அளவிற்கு இன்று விளம்பரங்கள் இன்றிமையாத இடத்தைப் பெற்று விட்டன.

    புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்கள் - சில எடுத்துக்காட்டுகள்:

    R.K. SWAMY ADVERTS, ULKA, BATES, HTA, MAGNUM, Inter Grafiks, Rediff, SITA, SE

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:17:35(இந்திய நேரம்)