தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

6.7 இன்றைய விளம்பரத்தின் நிலை

  • 6.7 இன்றைய விளம்பரத்தின் நிலை

    விளம்பரத்தின் இன்றைய நிலையையும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் இனிப் பார்ப்போம்.

    தொலைக்காட்சியும், இதழ்களும் விளம்பரத்தில் மட்டும் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

    தொலைக்காட்சியில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர், நடிகை. விளையாட்டு வீரர் முதலியோர்களின் நேர்காணல்வழி விளம்பரம் செய்யப்படுகிறது. எனவே, தொலைக்காட்சியில் காட்டும் அதே விளம்பரம் இதழ்களில் இடம்பெறும் போது அதே கருத்துகளுடன் அந்தந்தப் படங்களுடன் இடம் பெறுகின்றது.

    இதயம் நல்லெண்ணெய் என்றால் ஜோதிகா படமும், சரவணா ஸ்டோர் என்றால் சினேகா படமும் Sunrise என்றால் அஜித் படமும் இடம் பெறுகின்றன.

    பெரும்பாலும் இன்றைய விளம்பரங்கள் மக்களை ஈர்ப்பனவாகவே அமைகின்றன. குழந்தை, ஆண், பெண், முதியவர் என அனைவரையும் தன்வயப்படச் செய்யும் நிலையே பெருகி வருகின்றது.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இதழ்களில் விளம்பரப்படுத்துவது, இதழ்கள் குறித்துத் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துவது என்பனவும் காணப்படுகின்றன.

    பெரும்பாலான இதழ்கள் விளம்பரங்களாலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. விளம்பரத்தால் வரும் பணத்தைக் கொண்டே இதழ்கள் நடத்தப்படுகின்றன. சிற்றிதழ்களில் இத்தன்மை குறைவாகவே காணப்படுகிறது.

    நன்மைகள்

    கல்வி குறித்த விளம்பரங்கள் கிராமங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

    அரசு மருத்துவமனை வழி உடல்சார்ந்த விழிப்புணர்வு தந்து மக்களைச் செயல்படத் தூண்டுகின்றன.

    புதிய புதிய உற்பத்திச் சாதனங்களை அறிமுகப்படுத்தி வேலைப் பளுவைக் குறைக்கின்றன.

    தீமைகள்

    மக்களை உலகமயமாக்கும் தன்மையில் மிகுதியாக ஈடுபடச் செய்கின்றன.

    பல விளம்பரங்கள் மக்களைச் சிந்திக்க வைப்பதில்லை. வெறும் மோகத்தை மட்டுமே உண்டு பண்ணுகின்றன.

    மக்களிடம் பரவலாக இறைந்து கிடக்கும் பணத்தை முதலாளியிடம் கொண்டு சேர்க்கின்றன. உலகப் பணக்காரர்களை உருவாக்குகின்றன.

    மக்களுக்குத் தெரியாமலேயே மக்களைச் சுரண்டவும் செய்கின்றன.

    நவீனம் என்று மக்களைச் சோம்பேறி ஆக்குகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:17:46(இந்திய நேரம்)